×

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 14ம் தேதி இனிப்பு பொங்கல்: பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: சமூகநல ஆணையர் அமுதவல்லி பள்ளி கல்வி துறை கூடுதல் கல்வி அலுவலர், அனைத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (சத்துணவு) ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், சத்துணவு திட்டத்தில் பயனடைந்து வரும் மாணவ, மாணவிகளுக்கு கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் ஜூன் 3ம் தேதி பள்ளி விடுமுறை என்பதால், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 14ம் தேதி இனிப்பு பொங்கல் அனைத்து பள்ளிகளிலும் அன்றைய தினம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் சமூக நலத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14ம் தேதி இனிப்பு பொங்கல் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள 43,094 சத்துணவு மையங்களின் மூலம் 44.72 லட்சம் மாணவ, மாணவிகளும் 54,439 குழந்தைகள் மையங்களின் மூலம் 14.40 லட்சம் குழந்தைகளும் பயன்பெற உள்ளனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 14ம் தேதி இனிப்பு பொங்கல்: பள்ளி கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Sweet Pongal ,Artist Centenary ,School Education Department ,Chennai ,Amudavalli ,Education ,
× RELATED கலைஞர் நூலகத்தில் ‘மரம் அறிவோம்’ நிகழ்ச்சி